சென்னை, ஜூன் 19: பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய 4 பேரை, போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.
புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் கென்னடி (வயது 38), இவர் மீது ஓட்டேரி காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. தண்டையார் பேட்டையை சேர்ந்தவர்கள் சதீஷ் (வயது 26), தமிழ்செல்வன் (வயது 23). இவர்கள் மீது வண்ணாரப்பேட்டை போலீசில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு உள்ளது. புரசைவாக்கத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 26) மீது தலைமை செயலக காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவின்பேரில், இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தின்கீழ சிறையில் அடைத்தனர்.