ஜமாபந்தி முகாம்: 1254 நபருக்கு நலத்திட்ட உதவி

தமிழ்நாடு

விழுப்புரம்,ஜூன்.19: மரக்காணம் வட்ட வருவாய்த் தீர்வாய முகாம் (ஜமாபந்தி) நிறைவு நாளில் 1,254 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மரக்காணம் வட்டத்தில் வருவாய்த் தீர்வாய முகாம், ஜூன் 3-ம் தேதி தொடங்கி 17-ந் தேதி வரை நடைபெற்றது. வருவாய்த்தீர்வாய அலுவலரான மாவட்ட வரு வாய் அலுவலர் இரா.பிரியா, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். கிராம வருவாய் கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டது.

முகாமில், 1,254 மனுக்கள் பெறப்பட்டு, உரிய துறை அலுவலர்களிடம் நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டன. மரக்காணம் வட்டாட்சியர் தனலட்சுமி வரவேற்றார். வருவாய்த் தீர்வாய அலுவல ரான, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா நலத்திட்ட உதவிகளை வழங்கி னார். இதில், 114 பேருக்கு பட்டா மாற்றம் சான்றிதழ் உள்பட மொத்தம் 1,254 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில், வருவாய்த்தீர்வாய மேலாளர் உஷா, வட்டாட்சியர்கள் பார்த்திபன், பாலமுருகன், ராஜன், திருநாவுக்கரசு, ஞானம், துணை வட்டாட்சியர்கள் ஏழுமலை, அசோக் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.