சிதம்பரம் ஜூன் 19:  சித்தமல்லி பூதங்குடி உள்பட 5 க்கும் மேற்பட்ட இடங்களில் ரூ. 5 கோடி செலவில் ஷட்டர்கள் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளின் நலனை கருத்தில கொண்டு வீராணம் ஏரியை முறையாக தூர்வார வேண்டும் என்று இளங்கீரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காவேரி டெல்டல பாகன விவசாய சங்கத்தலைவர் இளங்கீரன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- சிதம்பரம் அருகே காட்டுமன்னார்கோவில் பகுதியில் வீராணம் ஏரி உள்ளது .இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.5 அடியாகும். தற்போது ஏரியில் 43 அடி தண்ணீர்தான் உள்ளது. இதில் சென்னைக்கு 41 கனஅடி நீர் குடிநீர் தேவைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.

மேலும் மேலும் இந்த குடிநீர் சென்னைக்கு ஜூலை மாதம் முதல் வாரம் வரை அனுப்பும் வகையில் நீர் இருப்பு வீராணம் ஏரியில் உள்ளது. மேலும் வீராணம் ஏரியிலிருந்து பல்வேறு பாசன மதகில் இருந்து ஷட்டரை யாரும் திறக்காமல் இருக்கும் வகையில் ஷட்டரின் கீழே கான்கிரீட் சிமெண்ட் கலவை போட்டு பூசப்பட்டுள்ளது.

இதனால் இரவு நேரங்களில் சிலர் விவசாயத்திற்காக தண்ணீர் திறப்பது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. வீராணம் ஏரிப் பகுதியில் பகல் மாலை நேரங்களில் பலத்த காற்று வீசுவதால் வீராணம் ஏரியில் உள்ள தண்ணீர் அலை போல் அடித்துக்கொண்டு கரைகளில் மோதுகிறது ஏரி முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் அதிகமாக ஏரியில் இருக்கும் பொழுது அந்த தண்ணீர் ஏரியின் பின்புறம் உள்ள ஏராளமான விவசாய நிலங்களுக்கு சென்று அந்த நிலங்கள் தண்ணீரில் மூழ்கும் நிலைமை உள்ளது.

இதை தடுக்கும் வகையில் சித்தமல்லி பூதங்குடி உள்பட 5 க்கும் மேற்பட்ட இடங்களில் ரூ. 5 கோடி செலவில் ஷட்டர்கள் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் கோரி தமிழக அரசுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக காவிரி டெல்டா பாசன விவசாய சங்க தலைவர் இளங்கீரன் கூறுகையில் வீராணம் ஏரியில் அதிகப்படியான கொள்ளளவில் நீரைச் சேமிப்பதற்கு முறையாக தூர்வார வேண்டும்.

சென்னைக்கு குடிநீர் அனுப்புவதற்கு ஆர்வம் காட்டும் தமிழக அரசு இப்பகுதியிலுள்ள விவசாயிகள் கால்நடைகள் ஆகியோர் பயன்படுத்தும் வகையில் பாசன மதகுகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு இளங்கீரன் மேலும் கூறினார்