பந்தம் எடுத்து வந்தவர் தீ பிடித்து பரிதாப பலி

தமிழ்நாடு

திருத்தணி, ஜூன் 19: அம்மன் வீதி உலாவின் போது தீபந்தம் ஏந்தி சென்ற சலவைத் தொழிலாளியை ஆக்கிரோஷமாக தள்ளியதில் மண்ணெணெய் உடல் முழுவதும் சிதறி தீப்பற்றி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் ஆர்.கே.பேட்டை அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.பேட்டை அடுத்த சிஜிஎன் கண்டிகை கிராமத்தில் கடந்த செவ்வாழ்க்கிழமை நடைபெற்ற கங்கையம்மன் ஜாத்திரை திருவிழாவின் போது அம்மன் திருவீதி உலா வந்தது.

அப்போத அதே கிராமத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி முனிரத்தினம் (வயது 56) என்பவர் ஒரு கையில் மண்ணெணெய் கேன் வைத்துக் கொண்டு மறு கையில் தீபந்தம் வைத்துக் கொண்டு அம்மன் வீதி உலாவில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர்கள் இருவர் முனி ரத்தினத்துடன் முன் விரோதத்தால், வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீ ரென்று வேகமாக கீழே தள்ளியதில் உடல் முழுவதும் மண்ணெணெய் சிதறி தீபந்தத்திலிருந்து தீப்பரவியதில் உடல் முழுவதும் தீப்பற்றிக்கொண்டது.

உடல் கருகிய நிலையில் சலவைத் தொழிலளியை கிராமமக்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை கே.சி.சி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக இறந்தார்.  கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆர்.கே.பேட்டை போலீசார் முன் விரோதத்தால், சலவைத் தொழிலாளி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த அதே கிராமத்தைச் சேர்ந்த கிரி, வெங்கடேசன் ஆகிய வாலிபர்கள் இருவரை கைது செய்தனர். முன் விரோதத்தில் அம்மன் வீதி உலாவின் போது தீபந்தம் ஏந்தி சென்ற தொழிலாளியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.