சென்னை, ஜூன் 19: சாலிகிராமத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்து, ரூ.31,000 ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.

சாலிகிராமம் வேலாயுதம் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம் நடப்பதாக விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் சோதனையிட்ட போது, அங்கு ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.

வடபழனியை சேர்ந்த சரவணன், ஆறுமுகம் உட்பட 10 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.31,000 ரொக்கப்பணம், சீட்டுக்கட்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.