சென்னை, ஜூன் 19: எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை தனது அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் கொழு உடல் மருத்துவ இயல் நிலையத் தைத் தொடங்கி உள்ளது.  எம்ஜிஎம் ஹெல்த்கேர் இயக்குனர் டாக்டர் பிரஷாந்த் ராஜகோபாலன், முதன்மைச் செயல் இயக்குனர் டாக்டர் ராகுல் மேனன், பொது, மினிமல் அக்ஸஸ் (இரைப்பைக் குடல்) மற்றும் கொழு உடல் அறுவை சிகிச்சை துறை மூத்த ஆலோசகருமான டாக்டர் தீபக் சுப்பிமணியன் ஆகியோர் முன்னிலையில் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமண்யம் துவக்கி வைத்தார்.

இது குறித்துப் பொது, மினிமல் அக்ஸஸ் (இரைப்பைக் குடல்) மற்றும் கொழு உடல் அறுவை சிகிச்சை துறை மூத்த ஆலோசகர் டாக்டர் தீபக் சுப்பிமணியன் கூறுகையில், ‘எப்போதுமே உட்கார்ந்து கொண்டு பணியாற்றும் சூழலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமுமே அதிக எடை அல்லது அதீத எடைக்கு வழிவகுப்பதுடன், நாள்பட்ட நோய்களுக்குக் காரணமாகவும் அமையும் என்ற விழிப்புணர்வு சில இந்தியர்களிடம் குறைவாகவே உள்ளது.

எனவே நமது மக்களுக்கு அதீத எடையால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்க வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது.  இன்னும் சில இந்தியர்கள் அதீத எடை ஒரு நோய் என்பதையும், அது நேரடியாக உயர் இரத்த அழுத்தம், இரண்டாம் வகை நீரிழிவு, அதீத நிணநீர்க் கொழுப்பு நோய் மற்றும் இதய தமனி நோய்களுக்கும் காரணமாக அமையும் என்பதையும் அறியாமல் இருக்கின்றனர் என்றார்.

இது பற்றி எம்ஜிஎம் ஹெல்த்கேர் இயக்குனர் டாக்டர் பிரஷாந்த் ராஜகோபாலன் பேசுகையில், ‘எம்ஜிஎம்ஹெச் கொழு உடல் மருத்துவ இயல் நிலையம் நவீன எடை குறைப்பு முறையான எண்டோஸ்கோபிக் ஸ்லீவ் கேஸ்ட்ரோபிளாஸ்டி உள்ளிட்ட புதிய எண்டோ பேரியாட்ரிக் சிகிச்சை முறைகளை வழங்குகிறது என்று கூறினார்.