புதுச்சேரி, ஜூன் 19: கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் 36 இடங்கில் மரகன்றுகளை மாவட்ட கலெக்டர் விக்கிரமராஜா தலைமையில் நடப்பட்டன. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கஜா புயலால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தது தற்போது காரைக்கால் மாவட்டத்தில் வெப்பம் அதிகரித்துள்ளது.

இதனை சமன்படுத்த மாவட்ட கலெக்டர் விக்கிரமராஜா தலைமையில் விவசாய பெருங்குடி மக்கள் வணிகர் சங்க பேரவை மின்துறை அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

வெப்பத்தை தணிக்கும் பொருட்டு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நட்சத்திர உணவகங்கள் தலம் 300 மரக்கன்றுகளும் சாதாரண உணவகங்கள் பொதுமக்கள் 25 மரக்கன்றுகளும் அரசு ஊழியர்கள் தங்கள் சொந்த செலவில் ஒரு மரக்கன்றை இரும்பு கூண்டு அமைத்து வளர்த்திட வேண்டும் போன்றவற்றை ஆலோசிக்கப்பட்டு காரைக்கால் மாவட்டம் முழுவதும் 36 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவது என முடிவு செய்யப்பட்டது. இதில் காரைக்கால் மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் வேளாண் துறை கூடுதல் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.