புதுடெல்லி, ஜூன் 19: ஊழல் மற்றும் லஞ்ச குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சுங்கத் துறை, மத்திய கலால்துறை அதிகாரிகள் 15 பேரை மத்திய அரசு பணிநீக்கம் செய்துள்ளது.  இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், அடிப்படை விதிகள் 56-ன் கீழ், பொதுநலன் கருதி, இந்திய வருவாய் சேவை அதிகாரிகள் 15 பேரை பணி ஓய்வில் (பணிநீக்கம்) இந்திய குடியரசுத் தலைவர் அனுப்பியுள்ளார்.

இந்த அதிகாரிகள் 15 பேருக்கும் 3 மாத காலத்துக்கான ஊதியம், பிற சலுகைத் தொகை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட 15 பேரில், டெல்லியில் மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்கத் துறை அலுவலகத்தில் முதன்மை ஏடிஜியாக பணியாற்றிய அனுப் ஸ்ரீவாஸ்தவாவும் ஒருவர். கொல்கத்தா ஆணையர் சன்சார் சந்த், ஜி ஸ்ரீ ஹர்ஷா, ஆணையர்கள் நிலையிலான அதிகாரிகளான அதுல் தீக்ஷித், வினய் பிரிஜ் சிங் உள்ளிட்டோரும் இதில் அடங்குவர்.
இதற்கு முன் வருமான வரிதுறையில் பணியாற்றிய 10க்கும¢ மேற்பட்ட அதிகாரிகள் மீது இதே காரணத்திற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது,