சென்னை, ஜூன் 19: தண்டையார்பேட்டையில் உள்ள நகைக்கடையில் ஒரு கிலோ தங்கம் மாயமாகியுள்ளது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தண்டையார் பேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் ராம்லால் (வயது 50). இவர், அதே பகுதியில் நகைக்கடை நடத்திவருகிறார். இந்த நிலையில், கணக்கு வழக்கு பார்க்கும்போது கடையில் இருந்து நகைகள் சில காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்தியபோது, கடந்த ஆறு வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக நகை காணாமல் போயுள்ளதும், அதன்படி, இதுவரை ஒரு கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதும், கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து ராம்லால் அளித்த புகாரின்பேரில், தண்டையார் பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.