பர்மிங்காம், ஜூன் 19: உலகக்கோப்பை தொடரின் இன்றைய லீக் போட்டியில் டாஸ் ஜெயித்த நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளதால், தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்கிறது. மைதானத்தில் தொடர்ந்து ஈரப்பதம் உள்ளதால், ஒரு ஓவர் குறைத்து, 49 ஓவர்களாக ஆட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் ஆட்டம் பர்மிங்காமில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால், போட்டி நடக்கும் எட்ஜ்பேஸ்டான் மைதானத்தில் ஆடுகளம் (பிட்ச்) தவிர்த்து, மற்ற இடங்கள் (அவுட்ஃபீல்டு) ஈரப்பதமாக உள்ளதால், அவற்றை உலர்த்தும் பணியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

மைதானத்தை உலர்த்தும் பணி முடிவடைந்ததும் டாஸ் போடப்பட்டது. இதில், நியூசிலாந்து அணி டாஸ் ஜெயித்து பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தொடங்கியுள்ளது. மைதானத்தில் தொடர்ந்து ஈரப்பதம் உள்ளதால், ஒரு ஓவர் குறைத்து, 49 ஓவர்களாக ஆட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.