சென்னை, ஜூன் 20: சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்ந்துள்ளது. கிடுகிடுவென தங்கம் விலை உயர்ந்திருப்பது திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தும் நடுத்தர குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.3,211க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.512 உயர்ந்து, ரூ.25,644க்கு விற்பனையாகிறது.
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 25 ஆயிரத்து 500ஐயும் தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சில்லறை வணிகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.40.90க்கும் ஒரு கிலோ வெள்ளி 40,900க்கும் விற்பனையாகிறது. திருமண முகூர்த்தங்கள் நிறைந்த இந்த மாதம், அதே போல மாதமும் ஏராளமான முகூர்த்தங்களும் நடைபெறும்.

இந்த நிலையில் தங்கத்தின் விலை ரூ.512 உயர்ந்திருப்பது பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கத்தின் விலை கடந்த இரண்டு மாதங்களில் அதிகரித்து ரூ.25 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. இடையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக ஏறுமுகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.