மும்பை, ஜூன் 20:  மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானது. மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா பகுதியில் இன்று காலை 7.48 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் அதிர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனினும் நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.