அமெரிக்க டிவி சீரியலில் ஸ்ருதி ஹாசன்

சினிமா

சென்னை, ஜூன் 20: பாடகியும், நடிகையுமான ஸ்ருதிஹாசன், அமெரிக்க நிறுவனம் எடுக்கும் சீரியலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.  கடந்த 2 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த ஸ்ருதி ஹாசன், தனது காதலருடன் ஏற்பட்ட முறிவிற்குப் பிறகு, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் ‘லாபம்‘ படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த நிலையில், தற்போது யூ.எஸ்.ஏ. நெட்வொர்க்கின் ‘ட்ரெட்ஸ்டோன்’ சீரியலில் நடிக்க ஸ்ருதி ஒப்பந்தமாகியுள்ளார். இதன்மூலம், யூ எஸ் ஏ என்னும் பிரபல நெட்வொர்க்கால் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்த தொலைக்காட்சி தொடரில் நீரா படெல் என்னும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்,

ஸ்ருதி. டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் பணியாளராக வேலை பார்த்து கொண்டே மறைமுககொலையாளியாக உலவும் வகையில் இக்கதாப்பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளதாம். மைக்கேல் ஃபோர்ப்ஸ், பாட்ரிக் ஃபுஜித், மைக்கேல் கேஸ்டன், டெஸ் ஹௌப்ரிச் உள்ளிட்டோரும் இதில் நடிக்கிறார்கள்.

நடிப்பை தவிர்த்து, இசையிலும் ஆர்வம் காட்டிவரும் ஸ்ருதி, ஹிரிவில் இசைக்குப் பெயர் பெற்ற பல மேடைகளிலும், சபைகளிலும் பாடிவருகிறார்.  அதேசமயம், தற்போது அவருடைய முதல் இசை ஆல்பத்தை வெளியிடுவதிலும் பிஸியாக உள்ளராம்.