சென்னை, ஜூன் 20: மெட்ரோ ரெயில் நிர்வாக அலுவலகத்தில் உதவி கணக்காளராக பணியாற்றி வந்த பெண், ரூ.28 லட்சம் கையாடல் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பணத்தில் ஆடம்பரமாக திருமணம் செய்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

மெட்ரோ ரெயில் நிர்வாகத்தில் உதவி கணக்காளராக பணியாற்றியவர் பரகத் பானு 22. கடந்த செப்டம்பர் இவர் வேலையை விட்டு நின்றுள்ளார்.  இவர் ஒப்பந்த நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ.23 லட்சம் 53,300 கையாடல் செய்ததாக தெரிய வந்தது.

நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தனது உறவினர் வங்கி கணக்கில் செலுத்தி விட்டு பின்னர் அதை எடுத்து செலவிட்டு வந்ததாக தெரிய வந்தது.  இது குறித்து கோயம்பேடு உதவி கமிஷனர் ஜெயராமனிடம் புகார் அளித்ததன்பேரில், கோயம்பேடு குற்றப்பரிவு இன்ஸ்பெக்டர் தீபக் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை வந்தனர்.

தலைமறைவாக இருந்து வந்த பரகத் பானுவை தேடி வந்தனர். இதனிடையே அவர் செம்மஞ்சேரியில் இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து நேற்று அவரை கைது செய்து, ரூ. 8 லட்சம் பணத்தை மீட்டுள்ளார்.
விசாரணையில் ஆடம்பரமாக திருமணம் செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவந்துள்ளதாக தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தெரிவித்துள்ளனர்.