சவுதாம்டன் / மான்செஸ்டர், ஜூன் 21:
வார இறுதியான சனிக்கிழமையான 22-ம் தேதி நாளை இரு போட்டிகள் நடைபெறுகின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு சவுதாம்டனில் நடைபெற உள்ள முதல் போட்டியில் இந்தியாவை ஆப்கானிஸ்தான் எதிர்கொள்கிறது. ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ள ஆப்கான், இதுவரை தோல்வியடையாத இந்தியாவை எதிர்கொள்கிறது.
நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து வரும் நியூசிலாந்தை வெஸ்ட் இண்டீஸ் எதிர்கொள்கிறது. அரையிறுதி வாய்ப்பை அடைய வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயத்தில் இந்த அணி உள்ளது.