காஞ்சிபுரம், ஜூன் 21: காஞ்சிபுரம் சின்ன காஞ்சியில் அமைந்துள்ள பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. மத்திய அரசின் உயர்கல்வித்துறை ஆணைக்கு இணங்க நாட்டு நலப்பணித்திட்டம் துறை இணைந்து மனவள கல்வி பயிற்சி மன்றம் சார்பில் யோகாசன பயிற்சி அளிக்கப்பட்டது.

அதன்படி, 14 வகையான யோகாசனங்கள், அதன் பயன் மற்றும் விளக்கங்களுடன் செய்து காண்பிக்கப்பட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், கல்லூரி முதல்வர் டாக்டர் ஸ்ரீமதி ராமலிங்கம், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர், உடற்கல்வி இயக்குநர், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று யோகாசனம் செய்தனர்.