சென்னை, ஜூன் 21: சீர்காழி அருகே கெயில் குழாய் புதைக்கும் போது கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்ததால் இரண்டு நாட்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு குழி தோண்டிய போது சாலையின் அருகே புதைக்கப்பட்டிருந்த கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்துள்ளது.

இதனால், தண்ணீர் பீரிட்டு வெளிவந்து வீணாகிவருகிறது. குழாய் உடைந்ததால், பணியை அப்படியே நிறுத்திவிட்டு கண்டுக்காணாமல் சென்றுவிட்டதாக கெயில் நிறுவனம் மீது குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தண்ணீர் பஞ்சம் நிலவிவரும் இன்றைய சூழலில், இப்படி வீணாகும் தண்ணீரால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.