மதுரை, ஜூன் 21: மதுரை மீனாட்சி அம்மன¢கோயிலில் மழை வேண்டி நாளை சிறப்பு யாகம் நடைபெற இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.
முன்னதாக மீனாட்சி அம்மன் கோயிலில் அவர் சிறப்பு வழிபாடு செய்தார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது:-
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சனை இல்லை.

சட்டப்போராட்டம் நடத்தி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட்டுள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. மதுரை மாவட்டத்தின் கண்மாய்கள் தூர்வாரப்பட்டுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை பெய்வதற்காக மதுரை மீனாட்சி அம்மன¢கோயிலில் நாளை சிறப்பு யாகம் நடைபெற உள்ளது என்றார்.