சென்னை, ஜூன் 21: பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான “தர்பார் “படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166-வது படமாக உருவாக விருக்கிறது.

ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தை லைகா புரொடக்ஷன் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ச் சியாக நடைபெற்று வந்த நிலையில், 2-ம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது.

இப்படத்தில் தற்போது பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ்சிங்கின் தந்தை இணைந்துள்ளார். அவர் இதில் ரஜினியின் அறிமுக காட்சியில் நடிப்பதாகவும், ரஜினியுடன் பயங்கரமான சண்டைக்காட்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் யுவராஜின் தந்தை யோக் ராஜ் சிங்கும் ஒரு கிரிக்கெட் வீரர். இவர் ஒரு டெஸ்ட், 6 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதன் பின்னர் நடிப்பில் இறங்கி பஞ்சாபி படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார். யுவராஜ்சிங் சமீபத்தில் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.