புதுடெல்லி, ஜூன் 21: தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக உடனடியாக ரூ. ஆயிரம¢கோடி தர வேண்டும் என நிதி அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக துணை அமைச்சர் ஓ,பன்னீர்செல்வம் வலியுறுத்தினார், கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்ட பட்ஜெட்டில் ரூ, 6 ஆயிரம¢கோடி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார். ஜூலை 5-ந் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய இருப்பதையொட்டி மாநில நிதி அமைச்சர்கள் மாநாடு இன்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.

நிதி இலாகாவை வகிக்கும் துணை முதலமைச்சர் ஓ,பன்னீர்செல்வம் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியதாவது:- தமிழகத்திற்கு வறட்சி சிறப்பு நிவாரண நிதியாக உடனடியாக ரூ. ஆயிரம¢கோடி ஒதுக்க வேண்டும். கோதாவரி, கிருஷ்ணா இணைப்பு திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், கஜா புயலால¢ வீடு இழந்த 2 லட்சம் பேருக்கு வீடுகள் கட்ட ரூ. 6 ஆயிரம¢கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆணைக்கட்டி குடிநீர் திட்டத்தை நிவேற்றுவதற்கு 17 ஆயிரத்து 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இது பற்றிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியிடப்பட வேண்டும் என தமிழகம் சார்பில் கேட்டு கொள்கிறேன், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ¢ஒதுக்கப்படும் தொகையை ரூ. 6 லட்சம் கோடியாக அதிகரிக்க வேண்டும், முதியோருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதம் ரூ.1000 உதவித் தொகையை ரூ. 2000 ஆக அதிகரிக்கும் வகையில் மத்திய அரசின்நிதி பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்.தமிழக அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தேசிய அளவில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்விட்ச் பாரத் திட்டத்தை முன்னெடுத்து பிரச்சாரம் செய்வதை பின்பற்றி மழைநீர் சேகரிப்பு திட்டத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர¢பேசினார்.