லீட்ஸ், ஜூன் 21:  இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் 2 ஓவரிலேயே இலங்கை அணியின் தொடக்கவீரர்கள் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தனர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டி லீட்ஸில் இன்று தொடங்கியது. இங்கிலாந்து-இலங்கை அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில், டாஸ் ஜெயித்த இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க வீரர்களாக கேப்டன் திமுத் கருணாரத்னே, விக்கெட் கீப்பர் குசல் பெரேரா ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரின் கடைசி பந்திலேயே திமுத் ரத்னா அவுட்டாக, அடுத்த ஓவரின் 2-வது பந்தில் பெரேராவும் அவுட் ஆகி நடையை கட்டினார். முதல் 2 ஓவர்களிலேயே தொடக்க வீரர்கள் அவுட்டானது அந்நாட்டு ரசிகர்களை கலக்கமடைய செய்துள்ளது.