சென்னை, ஜூன் 21:
கடந்த இரண்டு வருடங்களாக பேச மறுத்த காதலியை அரிவாளால் வெட்டி வெட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஈரோடு மாவட்டம் ரூபியான் பாக் பகுதியைச்சேர்ந்த விஜயராகவனின் மகன் சுரேந்தர்.

இவரும் ஈரோடு மாவட்டம் கொண்டச்சி பாளையம் அருகே உள்ள களியங்காட்டு வலசு என்ற கிராமத்தைச்சேர்ந்த வீரமணியின் மகள் தோன்மொழி (வயது25) இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் வெவ்வேறு மதத்தைச்சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனால் கடந்த 2 வருடமாக சுரேந்தரிடம் தேன்மொழி பேசுவதில்லையாம். இந்த நிலையில், தேன்மொழிக்கு வேலை கிடைத்து சென்னையில் பணியில் சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில் சுரேந்தர் சென்னை வந்தார். அப்போது தேன்மொழிக்கு போன் செய்து நான் உன்னிடம் பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கு தேன்மொழி சம்மதம் தெரிவிக்கவே, கடந்த 15ம்தேதி பணி முடிந்து காதலி வரும் வரை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் சுரேந்தர் காத்திருந்தார்.

மாலை 6மணிக்கு வந்த தேன்மொழி காதலனுடன் பேசிகொண்டிருந்தார்.
அப்போது திருமணத்திற்கு வீட்டில் சம்மதிக்கவில்லை என்றாலும் நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என்று தேன்மொழியிடம் கூறியுள்õளர்.

அதற்கு அவர் வீட்டின் நிலைமையை எடுத்து கூறி நாம் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொள்ளவேண்டாம் என்று தேன்மொழி மறுத்துள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த சுரேந்தர் வாழ்ந்தால் இருவரும் வாழ்வோம். இறந்தால் இருவரும் இறந்து விடுவோம் என்று கூறியுள்ளார். அதற்கு தேன்மொழி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அவர்ர் ஏற்கனவே ஒரு முடிவில் கத்தியுடன் வந்த சுரேந்தர் கண் இமைக்கும் நேரத்தில் தேன் மொழியை கன்னம், தாடை, கழுத்து கை ஆகிய இடங்களில் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

இதில் தேன்மொழி ரத்த வெள்ளத்தில் விழுந்தார்.

இதைபார்த்த சுரேந்தர் காதலி இறந்து விடுவாள் என்று நினைத்து தானும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்தபோது அந்த நேரத்தில் பீச் செல்லும் மின்சார் ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில் பலத்த காயம் அடைந்த சுரேந்தரையும், ரத்த வெள்ளத்தில் போராடிய தேன்மொழியையும் பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கடந்த 7 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த சுரேந்தர் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 2 மணியளவில் உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த தேன்மொழி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதகுறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.