சென்னை, ஜூன் 22: திண்டிவனத்தை சேர்ந்தவர் நசீர்கான் (வயது 58). இவர், சென்னை ஓட்டேரியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி டிரைவராக வேலை பார்த்துவந்துள்ளார். அப்போது, 14 வயதுடைய உறவுக்கார சிறுமியிடம் தவறாக நடந்துவிட்டு, தலைமறைவாகிவிட்டார்.

கடந்த நவம்பரில் நடந்த இந்த சம்பவம் குறித்து, அந்த சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில், புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிந்து நசீரை தேடிவந்தனர்.
இந்த நிலையில்,புதுவையில் பதுங்கியிருந்த நசீர்கானை புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்து, போக்சோவின்கீழ் சிறையில் அடைத்தனர்.