சவுத்தாம்டன், ஜூன் 22:  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பை கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பங்கேற்றுள்ள வீரர்களும் தங்களது ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட்டு வருகின்றனர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றிருக்கும் அணி வீரர்கள் பள்ளி குழந்தைகளை சந்திக்கும் கிரிக்கெட் கிளீனிக் என்ற நிகழ்ச்சியை ஐசிசி நடத்தி வருகிறது. அதன்படி சவுத்தாம்டனில் உள்ள ஹாம்ஸ்பியர் பவுல் மைதானத்தில் 30 பள்ளி குழந்தைகளுடன் இந்திய அணி வீரர்களான விராட் கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் நேரம் செலவிட்டனர்.

அவர்களுடன் சிறிதுநேரம் கிரிக்கெட் விளையாடிய வீரர்கள், தங்களது அனுபவங்களையும், கிரிக்கெட் உக்திகளையும் பகிர்ந்துகொண்டு, இறுதியில் குழுப்புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.