டிரம்ப் மீது பெண் பத்திரிகையாளர் பாலியல் புகார்

உலகம்

வாஷிங்டன், ஜூன் 22: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது, பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். பத்திரிகையாளரான இஜீன் கர்ரோல் (75), நியூயார்க் பத்திரிகையில் எழுதி உள்ள பத்தியில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இ ஜின் கர்ரோல் தனது குற்றச்சாட்டில் கூறியிருப்பதாவது:- ,  1995 அல்லது 1996 ஆம் ஆண்டு வாக்கில் டிபார்மென்ட் ஸ்டோர் ஒன்றின் உடை மாற்றும் அறைக்குள் அத்துமீறி நுழைந்து, தன்னிடம் பாலியல் சீண்டலில் டொனால்டு டிரம்ப் ஈடுபட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் பற்றிய இது போன்ற பல விஷயங்களை விரைவில் தான் வெளியிட உள்ள புத்தகத்தில் எழுதி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தான் அமைதியாக இருந்தது தனக்கு குற்ற உணர்ச்சியாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.  தன் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக டிரம்ப் மறுத்துள்ளார்.