புதுச்சேரி, ஜூன் 22: புதுச்சேரி வடக்கு மாநில திமுக மண்ணாடிப்பட்டு தொகுதி சார்பில் கழக செயல்வீரர்கள் கூட்டம் திருக்கனூர் கடைவீதியில் உள்ள கி.ரி.பிளாசாவில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு தொகுதி அவைத்தலைவர் மண்ணாங்கட்டி அவர்கள் தலைமை தாங்கினார். மாநில துணை அமைப்பாளர் கி.ரி.குமார்,தொகுதி செயலாளர் வி.கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி வடக்கு மாநில திமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி சிவக்குமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கழக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்.ஜானகிராமன் மற்றும் விக்கிரவாண்டி எம்.எல். ஏ.கு.ராதாமணி ஆகியோர்களுக்கு மௌண அஞ்சலி செலுத்தப்பட்டது . திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிக்கும் நாளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் தொகுதி சார்பில் பெரும் திரளாக கலந்துக் கொள்வது.என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.  கூட்டத்தில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.செந்தில் குமார், மாநில மாணவரணி அமைப்பாளர், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.