ஜமாபந்தி நிறைவு விழாவில் நலத்திட்ட உதவிகள்

சென்னை

திருத்தணி, ஜூன் 22:  திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பிஎம் நரசிம்மன் எம்எல்ஏ வழங்கினார். திருத்தணி அருகே ஜமபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அலுவலர் சாய்வர்த்தின் தலைமை தாங்கி மனுக்களை பெற்று வந்தார். திருத்தணி தாலுக்காவில் அடங்கிய ஊராட்சிகளில் பொது மக்கள் பல்வேறு நல திட்டங்களை கேட்டு மனுக்களை அளித்து வந்தனர். இதனை தொடர்ந்து நேற்று இந்த ஜமாபந்தி நிறைவு விழா வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் மொத்தம் 1500 மனுக்கள் பெறப்பட்டு 450 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மாவட்ட சமூகபாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் பார்வதி தலைமையில் பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எம்.எல்.ஏ. பி.எம்.நரசிம்மன், கலந்து கொண்டு நலதிட்ட உதவிகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில் தாசில்தார் செங்கலா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விசாலாட்சி துணை தாசில்தார்கள் மதியழகன் வெங்கடேசன், தமிழ்ச்செல்வி, வட்டவழங்கல் அலுவலர் விஜயலட்சுமி, வருவாய் ஆய்வாளர்கள் ராஜேந்திரன், அம்பிகா, சாமுண்டீஸ்வரி, முன்னாள் நகராட்சி தலைவர் டி.சௌந்தர்ராஜன், உள்ளிட்ட கிராம நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.