இணையத்தில் டிரெண்டான விஜய்யின் ‘பிகில்’

சினிமா

நடிகர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி ‘தளபதி 63’ படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்திற்கு பிகில் என தலைப்பு வைத்துள்ளனர். மேலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தந்தை மகன் என இரண்டு கெட்டப்புகளில் விஜய் கலக்கி உள்ளார்.

‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்கு பிறகு விஜய் – அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘தளபதி 63’. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.  இப்படத்தில் விஜய்யுடன், நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, சவுந்தரராஜா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று மாலை 6 மணிக்கும், இரண்டாவது லுக் போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கும் வெளியிட்டனர். இது ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமைந்தது. இந்த படத்திற்கு ‘பிகில்’ என பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என 2 கெட்டப்புகளில் நடிக்கிறார். அப்பா விஜய் மீன் கடைக்காரராகவும், மகன் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்துள்ளனர்.

கால்பந்து விளையாட்டில் உள்ள அரசியலை வெளிச்சம்போட்டு காட்டி உள்ளார். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்த கட்ட பணிகள் தொடங்கி உள்ளது.
இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.