சிவகார்த்திகேயன் படத்தின் பெயர் ‘எங்கவீட்டு பிள்ளை?’

சினிமா

மிஸ்டர் லேக்கல் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்திலும், பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இதில் பாண்டிராஜ் இயக்கும் படத்தின் தலைப்பு ‘எங்கவீட்டு பிள்ளை’ என வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதல் பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, அனு இம்மானுவேல், நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய டி.இமான் இசையமைக்கிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தின் தலைப்பு உரிமை விஜயா புரொடக்ஷன் நிறுவனத்திடம் உள்ளது. இதன் காரணமாக ‘எங்க வீட்டு பிள்ளை’ தலைப்பை படத்துக்கு வைக்க அனுமதி கேட்டு படக்குழுவினர் விஜயா புரொடக்ஷன் நிறுவனத்தை வன் பிக்சர்ஸ் அணுகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.