காக்கா முட்டை சிறுவன் நடிக்கும் ‘பிழை’

சினிமா

இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் காக்கா முட்டை புகழ் ரமேஷ், அப்பா பட புகழ் நசாத், மைம் கோபி, சார்லி, கோகுல், தர்ஷினி, கல்லூரி வினோத் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிழை’. அண்மையில், இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், இசை வெளியீட்டு விழா சென்னை பிரஷாத் லேப்பில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது பேசிய சார்லி கூறியதாவது:- சின்னப்படம் எது, பெரிய படம் எது என்பதெல்லாம் ரிலீசுக்கு முன்னாடி தெரியாது. படம் வெளியாகி வெற்றி பெற்றால் அது பெரிய படம் என்பார்கள். போட்ட பணத்தை எடுக்கும் படங்களுக்கு மத்தியில் ஒரு நல்ல விசயத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட தைரியமான படம் இது. இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா ஒரு சிறந்த ஓவியர். அதனால் தான் படத்தையும் காட்சிக்கு காட்சி ஓவியமாக எடுத்திருக்கிறார்.

என்னையும் மேக்கப் இல்லாமல் இயல்பான தாடியுடன் நடிக்க வைத்துள்ளார். தலைப்பில் பிழை இருந்தாலும் பிழை இல்லாத வெற்றி படமாக இது இருக்கும் என்றார்.