அமேதி, ஏப்.10:காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடு வதற்காக தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தி அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஏற்கனவே வயநாடு தொகுதியில் அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இன்று அமேதியில் தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின் போது, ராகுல் காந்தியின் தாயார் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோர் உடனிருந்தனர்.

அமேதியில் ராகுல் காந்தியை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவை நாளை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தி ஏற்கனவே அமேதி தொகுதியிலிருந்து 2004, 2009, 2014 ஆகிய 3 முறை தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளார். இந்த தொகுதியில் அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்று அவரை எதிர்த்துப் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரச்சாரம் செய்து வருகிறார்.