மான்செஸ்டர், ஜூன் 23:  விண்டீசுக்கு எதிராக மான்செஸ்டரில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் மற்றொரு ஆட்டத்தில், நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

முதல் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் (148) சதம் கடந்து அசத்தினார். ராஸ் டெய்லர் அரைசதம் கடந்தார். இதன்மூலம், அந்த அணி 291 ரன்கள் குவித்தது.
பின்னர் விளையாடி விண்டீஸ் அணியிலும், கிறிஸ் கெயில் (87), ஹெட்மயர் (54) அரைசதம் கடக்க, பிராத்வெயிட் (101) சதம் விளாச அந்த அணி இலக்கை விரட்டியபடியே சென்றது. விண்டீஸ்தான் வெல்லும் என்ற நிலையில், கடைசி ஆர்டர் வீரர்கள் மளமளவென விக்கெட்டுகளை தாரைவார்த்து கொடுத்ததன்மூலம், 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது.