கொழும்பு, ஜூன் 23: இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.  இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில், 258 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 9 பேர் தற்கொலை வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. ஆனால் இதற்கு உள்நாட்டு பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (என்.டி.ஜே.) மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியது. இந்நிலையில், இலங்கையின் தெற்கே கல்லி நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இதனை தெரிவித்தார்.