சென்னை, ஜூன் 23: சென்னை கிண்டி மற்றும் எம்.ஜி.ஆர் நகரில் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் ஹான்ஸ் விற்றதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிண்டி மடுவான்கரை மசூதி காலனியில் உள்ள பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் ஹான்ஸ் ஆகிய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கிண்டி போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஒரு பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்த ஜாகிர் உசேன் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 157 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.  மேலும், எம்.ஜி.ஆர்.நகர் சூளைப்பள்ளம் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அங்கு குட்கா விற்பனை செய்த ராஜேஷ் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்து, 50 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.