விஜய்யின் 3-வது போஸ்டரை வெளியிட்ட பிகில் பட குழு

சினிமா

தெறி-மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய்-இயக்குனர் அட்லி, மூன்றாவது முறையாக பிகில் படத்தில் இணைத்துள்ளனர் . வில்லு படத்திற்கு பிறகு விஜயுடன் நடிகை நயன்தாரா இந்த படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் . மேலும் இவர்களுடன் நடிகர் விவேக் , ஜாக்கி ஷெரஃப், கதிர் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 21-ம் தேதி மாலை படத்தின் பெயர் மற்றும் பஸ்ட்லுக் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து இரவு 12 மணிக்கு 2-வது லுக் வெளியானது. இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு மேலும் விருந்தாக நேற்று மாலை 3-வது லுக்கும் வெளியானது.  இதில் விஜய் லுங்கி கட்டிக்கொண்டு கையில் சைக்கில் செய்னுடன் படு லோக்கலாக உள்ளார். மற்ற இரண்டு போஸ்டர்களை விட இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது .