ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் டேவிட் கோபினை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரோஜர் பெடரர். சனிக்கிழமை இரவு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் பியரி ஹியுக்ஸ் ஹெர்பர்டை வீழ்த்தி இறுதிச் சுற்றில் நுழைந்தார். மற்றொரு அரையிறுதியில் பெல்ஜிய வீரர் டேவிட் கோபின் 7-6, 6-3 என நேர் செட்களில் இத்தாலியின் மட்டியோ பெர்ரட்னியை வென்று இறுதிக்குள் நுழைந்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் டேவிட் கோபினை 7-6, 6-1 என்ற நேர் செட்களில் வென்று பட்டம் வென்றார் பெடரர். இது அவர் கைப்பற்றும் 10-ஆவது ஹாலே பட்டமாகும். ஜூலை 1–ஆம் தேதி தொடங்கும் விம்பிள்டன் போட்டிக்கு தயாராகும் வகையில் வீரர்களுக்கு ஹாலே போட்டி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.