ராவல்பிண்டி, ஜூன் 24: பாகிஸ்தானில் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ஞாயிற்றுக் கிழமை மாலை சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசார் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதனிடையே அவர் உயிரிழந்திருக்கலாம் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராவல்பிண்டி வெடிகுண்டு தாக்குதல் குறித்த செய்தியை வெளியிடக் கூடாது என்று பத்திரிக்கைகளுக்கு அச்சுறுத்தல் செய்யப்பட்டு இருந்ததால், இந்த செய்தி வெளியாகவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் லைவர் மசூத் அசாரை சமீபத்தில் சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா., அறிவித்து இருந்தது. பாகிஸ்தான் ராணுவம் இவருக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக செய்தி வெளியாகி வந்தது. சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்த பின்னரும் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் மசூத் அசார் சிகிச்சை பெற்று வருவதாக செய்தி வெளியாகி இருந்தது.

இதை பாகிஸ்தான் அரசோ அல்லது அந்த நாட்டின் ராணுவமோ ஒப்புக் கொண்டு எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

சர்வதேச பயங்கரவதியாக அறிவித்த பின்னர் அவருக்கு பாகிஸ்தான் ராணுவமோ அல்லது அந்த நாடோ எந்த ஆதரவும், பாதுகாப்பும் வழங்கி இருக்கக் கூடாது. நாட்டை விட்டு வெளியேற்றி இருக்க வேண்டும்.

ஆனால், கிட்னி பழுதடைந்து ராவல்பிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் மசூத் அசார். இந்த நிலையில் தான் ஞாயிற்றுக் கிழமை மாலை ராவல்பிண்டி ராணுவ மருத்துவமனையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தாகவும், இதில் 10க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.