விருதுநகர். ஜூன் 24:  விருதுநகரை சேர்ந்த ஏராளமான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அக்கட்சியில் இருந்து விலகி பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த எம்பி தேர்தல், எம்எல்ஏ தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து அக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் உட்பட பல்வேறு பகுதியை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். இந்நிலையில் விருதுநகரை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் 150 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

21வது வார்டு சரவணன், திருக்குமரன், உதயகுமார், பாசறை பிரியா, செல்வராஜ், தலைவர் ரவீந்திர நாத், பிரபாகரன், அசோகன், நகர விஜயராஜ், நகர மீனவரணி செயலாளர் முத்துப்பாண்டி, விருதுநகர் 19வது வார்டு சுரேஷ்குமார், 21வது வார்டு கார்த்திக், நகர இளைஞரணி துணைச்செயலாளர், 21வது வார்டு முருகன், விருதுநகர் 4வது வார்டு சித்ராதேவி, 4வது வார்டு பிரபாவதி , விருதுநகர் 4வது வார்டு சிவரஞ்சனி, பிரகலாதன், முத்துலட்சுமி, பாண்டியம்மாள், சித்ரா, கஸ்தூரி, அரியம்மாள், தீபா, ஜோஸ்பின், போதும்பொண்ணு, ராஜா, நாகராஜன், கணேஷ்குமார், அசோக்குமார், கருப்பையா, மாரிமுத்து, அழகர்சாமி, ராஜேந்திரன் உட்பட ஏராளமான அமமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் நைய்னார்முகமது, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.