சவுதாம்டன், ஜூன் 24: ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கான் பீல்டிங்கை தேர்வு செய்தது. வங்கதேசம் 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழந்து 28 ரன் எடுத்து ஆடி வருகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவின் 31-வது லீக் ஆட்டம் ஆசிய அணிகளான ஆப்கானிஸ்தான், வங்கதேசத்துக்கும் இடையில் இன்று நடந்து வருகிறது.

ஜீரோ புள்ளியுடன் இருந்தாலும், இந்தியாவுடன் நடந்த போட்டியில் ஹீரோ போல விளையாடிய ஆப்கான் அணியுடன் வங்கதேசம் மோதுகிறது. வங்கதேசத்தின் அரையிறுதிக் கனவை ஆப்கான் தகர்க்குமா என்ற எதிர்பார்ப்பு உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் இன்று அந்த இரு அணிகளும் சவுதாம்டனில் மோதி வருகின்றன.

முதலில் களமிறங்கிய வங்கதேசம் 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 28 ரன்களை எடுத்திருந்தது. துவக்க வீரரான லிட்டன் தாஸ் 16 ரன்களில் முஜிப் உர் ரஹ்மான் பந்தில் ஹஸ்மத்துல்லா ஷாகிதிவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

தமீம் இக்பால் 7 ரன்களுடனும், ஷகிப் அல் ஹசன் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.