திருச்சி, ஜூன் 24: திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் உறையூர் அருள்மிகு பஞ்சவர்ண ஸ்வாமி திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை வேண்டி வருண ஜெபம்,சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இந்த யாகத்தில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் திருச்சி மேற்கு தொகுதி, உறையூர் அருள்மிகு பஞ்சவர்ண ஸ்வாமி திருக்கோவிலிலும், திருச்சி கிழக்கு தொகுதி அருள்மிகு தாயுமானவர் கோவிலிலும், ஸ்ரீரங்கம் தொகுதி அம்மா மண்டபம் அருகிலும், திருவெறும்பூர் தொகுதி கீழக்கல்கண்டார் கோட்டை சித்தி விநாயகர் கோவிலும் இன்று காலை 8.00 மணிக்கு மழை வேண்டி வருண ஜெபம்,சிறப்பு ஹோமம் மற்றும் அன்னதானம்நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் ப குமார், அமைச்சர்கள் வெல்லமண்டி என் நடராஜன், எஸ் வளர்மதி, அதிமுக அமைப்பு செயலாளர் மு. பரஞ்சோதி, மாவட்ட, பகுதி அதிமுக முன்னாள் இந்நாள், நிர்வாகிகள், வட்ட அதிமுக செயலாளர் கள் ,வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள்கட்சி முன்னோடிகள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள்,உள்ளாட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.