தீ விபத்தில் பாதித்த குடும்பத்துக்கு நிதி

சென்னை

திருத்தணி, ஜூன் 24: திருத்தணி அடுத்துள்ள ஆர்கேபேட்டையில் சமையல்செய்தபோது சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஓட்டு வீடு எரிந்து தீக்கிரையானது.  பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஜெகத்ரட்சகன் எம்பி நிதயுதவி வழங்கியதுடன் தனது சொந்த செலவில் ரூ. 25 ஆயிரம் வழங்கினார்.

ஆர்.கே.பேட்டை அடுத்த  கதனநகரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தன்ராஜ். கிராமத்திற்கு அருகில் அவரது விவசாய நிலத்தில் சீமை ஓடு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  நேற்று முன் தினம் இரவு  வீட்டில் சமைல் செய்து கொண்டிருந்த போது  சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு  திப்பற்றிக் கொண்டது.

அப்போது வீட்டிலிருந்த அனைவரும் பீதியுடன் ஓட்டம் பிடித்தனர். தீப்பற்றிக் கொண்ட சிறுது நேரத்தில்  தட்டுமுட்டு சாமன், பள்ளி சான்றுகள், குடும்ப அட்டை, பட்டா உட்பட அனைத்து பொருட்கள் எரிந்து நாசமானது.  அனைத்தும் எரிந்து நாசமானதால், தவித்த  தன்ராஜ் குடும்பத்தை நேற்று  ஒன்றிய திமுக நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

.மேலும்  எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி தனது சொந்த செலவிலிருந்து வழங்கிய ரூ.25 ஆயிரத்தை கல்வியாளர் காமராஜ் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கி ஆறுதல் கூறினார். இந்த நிகழ்சியின் போது மாவட்ட பொருளாளர் சத்தியராஜ், ஒன்றிய செயலாளர்கள் சி.என்.சண்முகம், பி.பழனி, பொது குழு உறுப்பினர் மா.ரகு, நிர்வாகிகள் எஸ்.ஆர். செங்குட்டவன்,  சி.என்.ரவி, சிலம்பு பன்னீர்செல்வம்,  வெங்கடாஜலம், அம்பேத்கர், சிங்காரம், சீனிவாசன், புருஷோத்தமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.