செங்குன்றம், ஜூன் 24: திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வேண்பாக்கம் பொன்னியம்மன் ஆலயத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. அமைச்சர் க.பாண்டியராஜன் யாகத்தில் கலந்து கொண்டார்.

இந்த யாகம் மாவட்ட செயலாளரும், பொன்னேரி எம்எல்ஏவுமான சிறுணியம் பி.பலராமன் தலைமையில் நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் முன்னாள் எம்பி வேணுகோபால் மற்றும் அதிமுகவினர் பங்கேற்றனர். சுமார் 3 மணி நேரம் நடத்தப்பட்டது.