செல்வவிநாயகர் கோயிலில் வருண ஜெப யாகம்

சென்னை

தாம்பரம். ஜூன் 24: தாம்பரம் செல்வ விநாயகர் ஆலயத்தில் மழை வேண்டி சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் தலைமையில் வருண ஜெப யாகம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் மழை வேண்டி தாம்பரம் செல்வவிநாயகர் கோதண்டராமர் திருக்கோவிலில் காஞ்சி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச. ராஜேந்திரன் தலைமையில் மழை வேண்டி வருண ஜெப யாகம் நடைபெற்றது.

இந்த சிறப்பு யாகத்தில் மீனவர் அணி செயலாளர் நீலாங்கரை முனுசாமிமாவட்ட அவைத் தலைவர் தனபால், முன்னாள் எம்எல்ஏ ப.தன்சிங், கே.பி. கந்தன், வி.என்.பி.வெங்கட்ராமன், ஒன்றிய செயலாளர் என். சி. கிருஷ்ணன், தாம்பரம் நகர செயலாளர் கூத்தன்,  முன்னாள் சிட்லபாக்கம் பேரூராட்சி தலைவர் மோகன், பம்மல் முன்னாள் நகர மன்ற தலைவர் இளங்கோவன், பேரூராட்சி முன்னாள் தலைவர் சம்பத் குமார், பல்லாவரம் நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் எல்லார் செழியன், நகர அம்மா பேரவை செயலாளர் கோபிநாதன், மாவட்ட பிரதிநிதி தி பி. கே.பரசுராமன் உட்பட ஏராளமான அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் வருண ஜெப யாகத்தில் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.