சென்னை, ஜூன் 24: சிட்லபாக்கம் ஏரியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ரஜினியின் மக்கள் மன்றத்தினருக்கு மூத்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஆர்.நல்லகண்ணு பாராட்டு தெரிவித்தார்.

சிட்லபாக்கத்தில் உள்ள ஏரி பராமரிப்பின்றி கிடந்தது. 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் 80 ஏக்கர் அளவுக்கு நீரை சேமிக்க முடியும்.

ஆனால் ஏரி வறண்டு கிடப்பதுடன், குப்பை கூளங்களால் பராமரிப்பின்றி கிடந்தது. ‘சிட்லபாக்கம் ரைசிங்’ என்ற அமைப்பு இந்த ஏரியை சுத்தப்படுத்துவதற்கு அரசிடம் அனுமதி கேட்டது.

அரசின் அனுமதி கிடைத்ததும் ஏரியை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டது. இதில் தன்னார்வ தொண்டர்கள் ரஜினியின் மக்கள் மன்றத்தினர், கமலின் மக்கள் நீதிமய்யத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் இந்த பணியில் ஈடுபட்டார்கள். ஏரியை சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகளையும். குப்பை கூளங்களையும் அவர்கள் அகற்றினார்கள். இதை கேள்விப்பட்டதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு நேரில் சென்று ரசிகர் மன்றத்தினரையும் மற்றவர்களையும் நேரில் வாழ்த்தினார்.

இதனைத¢தொடர்ந்து ஏரியை தூர்வார அனுமதிக்கும்படி அரசிடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் நாங்களே தூர்வாருகிறோம் என்று அரசு
தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதற்குள் மழை வந்துவிடும் என்பதால் தங்களுக்கு அனுமதி தர வேண்டும் என்று ரைசிங் அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.