லண்டன், ஜூன் 24: உலகக்கோப்பை கிரிக்கெட்டின் 33-வது லீக் ஆட்டத்தில் நாளை நியூசிலாந்தை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது. பர்மிங்காமில் நடைபெறும் ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கணிக்க முடியாத அணியாக இருந்து வரும் பாகிஸ்தான் வலிமையான இங்கிலாந்தை வீழ்த்தியது. எனினும் வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரேலியாவுடன் தோல்வியடைந்தது. புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வென்றால் தான் அரையிறுதியில் நுழையும் சாத்தியம் உள்ளது.

ஆனால் நியூசிலாந்தை பொறுத்தவரை தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வென்று முதலிடத்தில் உள்ளது. அதனை தக்கவைக்க முனைப்புடன் விளையாடும் என்று தெரிகிறது.