பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு 7’ படத்திற்கு யு சான்று

சினிமா

நடிகர் பார்த்திபன் என்றாலே வித்தியாசத்திற்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில், கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கி உள்ள புதிய படத்திற்கு ‘ஒத்த செருப்பு 7’ என பெயர் வைத்துள்ளார்.

இதில் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரபல நடிகர், நடிகைகள் பலர் நடித்துள்ள இப்படம் ஒரு குறுகிய கால தயாரிப்பாக உருவாகி உள்ளது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பாடல்களை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். இந்நிலையில் படம் சென்சார் செய்யப்பட்டு யு சான்று கிடைத்துள்ளது