சென்னை, ஜூன் 25: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 344 அதிகரித்து ரூ.26, 464-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து அதிகரித்து வந்தது.

கடந்த 22-ம் தேதி முதன்முறையாக சவரன் விலை ரூ. 26 ஆயிரத்தை தாண்டியது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 43 ரூபாய் அதிகரித்து ரூ.3,308 ஆக விற்பனையானது.
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 26,120-ல் இருந்து ரூ.26,464 ஆக உயர்ந்தது.

வெள்ளியின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 41.40க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி விலை ரூ. 41,400 ஆகவும் விற்பனையானது.