சென்னை, ஜூன் 25: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனின் கால அவகாசம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது. இதற்கான ஆணையை தமிழக அரசு 25.09.2017 அன்று, பிறப்பித்து ஓய்வு பெற்ற நீதிபதிஆறுமுகசாமியைக் கொண்ட ஒரு நபர் விசாரணை கமிஷனை நியமித்தது. இந்த கமிஷன் ஜெயலலிதா மரணம் சம்மந்தமாக தொடர்ந்து பலரிடம் விசாரணை செய்து வந்தது.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் அவரது இல்லத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனின் அவகாசம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது நேற்றுடன் அவகாசம் முடிய இருந்த நிலையில், ஐந்தாவது முறையாக அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.