தாம்பரம், ஜூன் 26: சென்னை தாம்பரத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா தேசிய மேல் நிலைபள்ளியில் அடல் ஆக்கத்திறன் ஆய்வகத்தை கல்வி அமைச்சர் கே.ஏ..செங் கோட்டையன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பள்ளி செயலர் கிரிஜா சேஷாத்ரி வரவேற்றார். அமைச்சர் செங் கோட்டையன் கூறுகையில், 9 வது முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளிகள் அனைத்தும் கணினி மயம் ஆக்கப்படும் .

3 மாதத்திற்குள் 6 லட்சம் பேருக்கு மேல் இலவச மடிக் கணினி வழங்கப்படும் என்றார்.அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அளித்த பதிலில்,
மத்திய அரசின் நிதி உதவிகளை தமிழக அரசு சிறப்பாக பெற்று செயல்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் மத்திய அரசு அடல் ஆக்கத்திறன். ஆய்வகங்களை பள்ளிகளில் ஏற்படுத்தி வருகிறது இந்தியா முழுவதும் மத்திய அரசு 7200 பள்ளிகளில் ஏற்படுத்தி உள்ளது. அதில் தமிழகத்தில் 700 க்கும் அதிகமான பள்ளிகளில் மத்திய அரசு நிதி பெற்று அடல் ஆக்கத்திறன் ஆய்வகங்கள் திறக்கப்பட்டுள்ளது மத்திய அரசின் நிதிகளை பெற்று தமிழகத்தில் கல்வி துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள ஏழை மாணவர் களும் நீட் தேர்வு எழுதும் வண்ணம் தகுதியான மாணவர்களுக்கு நீட் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இருக்கும் பாடப்புத்தகத்தை படிப்பதற்கு மடிக்கணினி அவசியமாக இருப்பதனால் தற்போது 11ஆம் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கிவிட்டு பின்பு அவர்களுக்கு வழங்க உள்ளது என்றார். இந்தநிகழ்ச்சியின்போது சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன், டி.கே.எம்.சின்னய்யா, எம்.கூத்தன், கோபிநாதன், சாடூன்எட்வர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.