புதுடெல்லி, ஜூன் 26:  3 ஆம் தேதி வங்கக் கடலில், குறைந்த காற்றழுத்த , தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக  இந்திய  வானிலை மையம் அறிவித்துள்ளது.

வடக்கு வங்கக் கடலில் இந்த காற்றழுத்தத் தாழ்வுப்  பகுதி உருவாகக் கூடும் என்று வானிலை மையம்  கூறியுள்ளது .

இதன் காரணமாக , ஜூலை ஒன்று முதல் 3 ஆம் தேதி வரை, வடகிழக்கு, கிழக்கு மற்றும்
அதனை ஒட்டிய மத்திய இந்தியா மற்றும் மேற்கு  கடற்கரை பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், வட மேற்கு இந்தியாவில் அடுத்த  4 தினங்களுக்கு வெப்ப நிலை இரண்டில் இருந்து  3 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது . காற்றழுத்த தாழ்வு பகுதியால்  தமிழகத்தில் மழைக்கான சாத்தியக்கூறுகள் குறைவு தான்
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது